
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்
அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் வருகிற நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2056 ( விசுவாவசு வருடம்) புரட்டாசி மாதம் 06 - ஆம் தேதி (22-09-2025) திங்கட்கிழமை முதல் புரட்டாசி மாதம் 15 - ஆம் தேதி (01-10-2025) புதன்கிழமை வரை நவராத்திரி கலைவிழா வெகுவிமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெறும். நவராத்திரி கலைவிழாவின் போது தினமும் அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். பக்தகோடிகள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளுக்குப் பாத்திரர்களாகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி சிறப்பு அலங்காரம் நடைபெறும்.
22.09.2025 - திங்கட்கிழமை - மனோன்மணி அலங்காரம், 23.09.2025 - செவ்வாய்க்கிழமை -மீனாட்சி அலங்காரம், 24.09.2025 - புதன்கிழமை - சதஸ் அலங்காரம், 25.09.2025 - வியாழக்கிழமை - காயத்ரி அலங்காரம், 26.09.2025 - வெள்ளிக்கிழமை - அன்னபூரணி அலங்காரம், 27.09.2025 - சனிக்கிழமை - கெஜலட்சுமி அலங்காரம், 28.09.2025 - ஞாயிற்றுக்கிழமை - சரஸ்வதி அலங்காரம், 29.09.2025 - திங்கட்கிழமை - ராஜராஜேஸ்வரி அலங்காரம், 30.09.2025 - செவ்வாய்க்கிழமை - மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், 01.10.2025 - புதன்கிழமை - விஜயதசமி அலங்காரம்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் மற்றும் உபயதார்கள் செய்து வருகின்றனர்.
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?