தனியார் கல்லூரியில் மாணவர்கள் உயிரிழந்ததாக வதந்தி: ஒருவர் கைது
Nov 04 2025
12
நாமக்கல், நவ.2- குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல் லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியவரை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செயல்ப டும் தனியார் (எக்ஸெல்) கல்வி நிறுவனத்தில் கடந்த 27 ஆம் தேதியன்று உணவு சாப்பிட்ட 128 மாணவ, மாணவிக ளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர்களை தனியார் கல்வி வளாகத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் குமார பாளையம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். இந்நிலையில், இச்சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் அமைதியை சீர ழிக்கும் வகையில், தவறாக பதிவு செய்த நான்கு கணக்குகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்இ இன்ஸ்டாகிராம் மூலம் தனியார் கல்வி நிறுவனத்தில் சில மாணவ, மாணவியர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உயி ரிழந்ததாக தவறாக பதிவு செய்தது குறித்து குமாரபாளை யம் காவல் ஆய்வாளர் பொறுப்பு சங்கீதாவிடம் புகார ளிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் சனி யன்று திருச்சி, தென்னூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமாரை கைது செய்தனர். மேலும், இணையதளங்களில் தவ றாக பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறி வித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?