தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தேர்வு
Nov 04 2025
14
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக(டிஎன்சிஏ) டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சந்திரசேகரன் செயல்பட்டார். சங்க உறுப்பினர்கள் வாக்களித்து முடித்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முன்னதாக, டிஎன்சிஏ தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எம்.குமரேஷ் துணைத் தலைவராகவும், ஆர். ரங்கராஜன் கவுரவ செயலராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் மூலம் கவுரவ செயலராக யு.பகவன்தாஸ் ராவ், கவுரவ இணைச் செயலராக கே.ராம், கவுரவ உதவி செயலராக சி.மாரீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அபெக்ஸ் கவுன்சில் உறுப்பினர்களாக ஆர்.கிருஷ்ணா, ஜி.மணிகண்டன், பி.எஸ்.ராஜன், சஞ்சய் கும்பட், எஸ்.செல்வமணி, என்.எஸ்.சங்கர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் 2025-2028 காலம் வரை பதவியில் இருப்பர். இத்தகவல் டிஎன்சிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலோ பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெளியேற்றம்
சார்புரூக்கன்: ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி கண்டு வெளியேறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குஸுமா வர்தானி 21-7, 21-13 என்ற நேர் செட்களில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?