தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை

தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை

கரூர் கூட்ட நெரிசல்; தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை - செந்தில் பாலாஜி தகவல்

குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய்யின் வாகனம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு நிலவி வரும் சூழல் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாமக்கல், சேலத்தில் இருந்து மருத்துவர்களை கரூருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தனியார் மருத்துவமனைகளிலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள நிலவரம் குறித்து விசாரித்தோம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.


இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மேலும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%