
புதுச்சேரி,அக். 6- புதுச்சேரி ஜிப்மர் ரத்த மாற்று மருத்துவத் துறை மற்றும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சமுதாயத்துடன் இணைந்து அக்டோபர் மாதம் கடைப்பிடிக்கப்படும் தேசிய தன்னார்வ ரத்த தான மாத விழாவை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, “ஒரு தானம் பல உயிர்களைக் காப்போம்” என்ற உணர்வை ஊட்டு வது இவ்விழாவின் நோக்கமாகும். இந்த போட்டிக்கான நடுவர்களாக ஜிப்மர் குழந்தைகள் மருத்துவத் துறையின் பேராசிரியர் மரு. ரீனா குலாதி மற்றும் ஜிப்மர் ஓவிய கலை ஞர் சுந்தரம்பாள் ஆகியோர் இருந்தனர். ரத்த மாற்று மருத்துவத் துறையின் கூடுதல் பேராசிரியர் மரு.அபிஷேக் நடுவர்களுடன் இணைந்து வெற்றியா ளர்களுக்கு பரிசுகளை வழங்கி, தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்திய பாராட்டினார். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆர்வ முள்ள பங்கேற்பு மூலம், “தன்னார்வ ரத்த தானம் உயிர்களுக்கு நம்பிக்கை” என்ற விழிப்புணர்வு செய்தி மேலும் வலுப்பெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?