
சென்னை தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அரங்கில் நாளை ஞாயிறு அன்று தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெறவுள்ளது. தலைவர் கவிஞர் வேலாயுதம் செயலர் விகந்தன் கவிஞர் புதுகை ஆதிரா ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலை வேந்தர் தமிழ்மாமணி தாழை. இரா .உதயநேசன் அவர்கள் கலந்துகொண்டு முனைவர் புகழேந்தியின் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் அம்மாச்சி பதிப்பகம், ஓவிய பதிப்பகம் , நூலேணி பதிப்பகம் , நண்பர்கள் பதிப்பகங்கள் கவிஞர்களின் 10 தன்முனை நூல்களை வெளியிடுகிறார்கள். இயக்குனர் இராசி அழகப்பன், முனைவர் அமுதபாரதி, முனைவர் சலேத்,கவிக்கோ துரைவசந்தராசன், எழுத்தாளர் விஜய் ஆனந்த் , கவிஞர் இராம வேல்முருகன், கவிஞர் கன்னிக்கோவில் இராஜா,கவிஞர் அமுதா தமிழ்நாடன், புரவலர் குமரன் அம்பிகா,கவிஞர் வெற்றிப்பேரொளி , தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா , முனைவர் வே.புகழேந்தி,தோழர் பா.இராஜா ராமன், எழுத்தாளர்
ஆகியோர் கலந்துகொண்டு நூல்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்முனைக் கவிஞர்களுக்கு பங்கேற்பு சான்றுகள் விருதுகள் வழங்கப்போவதாகவும் இதன் நிறுவனர் கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் செயல்தலைவர் ந.வேலாயுதம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை செயலர் விகந்தன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?