தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

இந்திய குடியரசின் சாதனைகள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஆரோவில்லில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

விழுப்புரம்: தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை சார்பில், ‘இந்திய குடியரசின் சாதனை கள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தின் நோக்கம் என்னவோ, அதுவே ஆரோவில் நோக்கமாகும். 75 வருட குடியரசு நாட்டில் நமக்கு கிடைத்தது என்ன? கிடைக்காதது என்ன? என்பதை யோசிக்க வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் என நமது நாட்டின் வளர்ச்சியைப் பிரிக்கலாம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும்.


நாள் தோறும் செய்தி தாள்கள் படிக்கும்போது, தமிழகத்தில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தனி வழி, தனி பாதை என்பது நமது மாநிலத்தில் இருக்கிறது. வகுப்புவாதிகளால் இன்றைக்கும் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் வகுப்பறைகளில் கூட சாதி பாகுபாடு இருக்கிறது.


உலகளவில் பொருளாதாரத் தில் 6-வது வளர்ந்த நாடாக இருக்கிறோம். 2014-ம் ஆண்டுக்கு முன்பு 30 சதவீத மக்கள் நமது நாட்டில் ஏழை மக்களாக இருந்தனர். 75 ஆண்டுகளாக 3 தலைமுறைகளாக பெரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளின் எண்ணிக்கை 26 சதவீதமாக குறைந்துள்ளது.


முன்பு ஒரு இன மக்களுக்கும், மற்றொரு இன மக்களுக்கும் இடையே மோதல் நிலவியது. நாட்டின் 200 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை இருந்தது. காஷ்மீரில் இந்து மக்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு நிலை மாறியது. வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்ற பாகிஸ்தான், தற்போது அடங்கி கிடக்கிறது. ஆனாலும், நம் நாட்டில் தேர்தலில்வாக்களிக்க பணம் கொடுக்கப்படுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%