ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் இடையே மோதல்: திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை ‘சீல்’

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் இடையே மோதல்: திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை ‘சீல்’

வன்னியர் சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய்த் துறையினர்.

விழுப்புரம்: ​திண்​டிவனத்​தில் வன்​னியர் சங்க தலைமை அலு​வல​கத்​துக்கு உரிமை கோரி ராம​தாஸ் மற்​றும் அன்​புமணி ஆதர​வாளர்​களிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. மேலும் அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் - மயிலம் சாலை​யில் உள்ள வன்​னியர் சங்​கம் தலைமை அலு​வல​கத்​தில், இடஒதுக்​கீடு போராட்​டத்​தில் உயி​ரிழந்த 21 தியாகி​களுக்​கு, கடந்த 38 ஆண்​டு​களாக செப்​.17-ம் தேதி அஞ்​சலி செலுத்​தப்​பட்டு வரு​கிறது. ஆண்டுதோறும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்துவது வழக்கம்.


மோதல் போக்கு தீவிரம்: தற்​போது ராம​தாஸ் மற்​றும் அன்​புமணி இடையே ஏற்​பட்​டுள்ள மோதலால், பாமக தொண்​டர்​கள் இரண்டு குழுக்​களாகப் பிரிந்​து, ஒரு​வரையொரு​வர் பரஸ்​பரம் குற்​றம்​சாட்டி விமர்​சிக்​கின்​றனர். இதற்​கிடையே, பாமக​வில் இருந்து அன்​புமணியை நீக்​கி​விட்​ட​தாக ராம​தாஸ் நேற்று முன்​தினம் அறி​வித்​துள்ள நிலை​யில், இரு தரப்​பினருக்​கும் இடையே மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்​துள்​ளது.



திண்டிவனம் வன்னியர் சங்க தலைமை அலுவலகம் முன்பு போலீஸார்

முன்னிலையில் மோதிக் கொண்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள்.

இந்​நிலை​யில், வன்​னியர் சங்க அலு​வல​கத்​தில் இடஒதுக்​கீடு போராட்​டத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு அன்​புமணி செப்​.17-ம் தேதி அஞ்​சலி செலுத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இதற்​காக, வன்​னியர் சங்க அலு​வல​கத்தை அவரது தரப்​பினர் கடந்த 2 நாட்​களாக சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதையறிந்த ராம​தாஸ் ஆதர​வாளர்​கள், வன்​னியர் சங்க அலு​வல​கத்​தின் முகப்பு பகு​தி​யில் இரவோடு இரவாக புதிய இரும்பு கதவு ஒன்றை அமைத்​து, அதற்கு பூட்டு போட்​டனர்.


இதற்​கிடையே வன்​னியர் சங்க தலைமை அலு​வல​கம் முன்பு நேற்று இரு தரப்​பினரும் திரண்​டனர். இதனால் முன்​னெச்​சரிக்​கை​யாக திண்​டிவனம் போலீ​ஸார் அங்கு குவிந்​தனர். போலீ​ஸார் சமா​தானப்​படுத்த முயன்​றும், வாக்​கு​வாதம் முற்​றி, இரு தரப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. நீண்ட போராட்​டத்​துக்கு பிறகு அவர்​களை போலீ​ஸார் சமதானப்​படுத்​தினர்.


பின்​னர் இரு தரப்​பினரும், திண்​டிவனம் காவல் நிலை​யத்​துக்​குச் சென்​று, வன்​னியர் சங்க அலு​வல​கத்​துக்கு இரு தரப்​பும் உரிமை கோரினர். டிஎஸ்பி பிர​காஷ் இருதரப்​பினரிட​மும் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் முன்​னேற்​றம் ஏற்​பட​வில்​லை. இந்நிலையில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்ற வருவாய்த் துறையினர், கதவை மூடி சீல் வைத்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%