தமிழகத்தில் 81.48 சதவிகித எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்! தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 முதல் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி யுள்ளன. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக் குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி நிலை முகவர்களாக 2.46 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27 அன்று மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ள னர். அவர்களில் 6 கோடியே 30 லட்சத்து 49 ஆயிரத்து 345 பேருக்கு, அதாவது 98.34 சதவிகித வாக்காளர்களுக்கு படி வங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது. இவ்வாறு விநியோகிக்கப்பட்ட படிவங்களில், பூர்த்தி செய்து அளிக்கப்பட்ட 5 கோடியே 22 லட்சத்து 42 ஆயிரத்து 884 படிவங்கள், அதாவது 81.48 சதவிகித படிவங்கள் கணினி யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியில் பூர்த்தி செய்து அளிக்கப்பட்ட 8 லட்சத்து 97 ஆயிரத்து 648 படிவங்கள் (87.87 சதவிகிதம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?