தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை - கவிஞர்கள் மன்றம் வரவேற்பு
Sep 23 2025
30

தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு
ஊக்கத் தொகை - மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்புக்கு
உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் வரவேற்பு
***************************************************************************
தமிழ்ப்படத்தில் எஸ் எஸ் எல் சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10000/- வழங்கப்படும் என்கிற அறிவிப்பினை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனை உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் வரவேற்றுள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் தமது தமிழ் மொழிப் பாடத்தில் கவனம் செலுத்தி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுகின்ற முனைப்பில் தமிழ் மொழியினை ஆழ்ந்து படிக்கின்ற ஆர்வத்தினை தூண்டும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது என்றும் இதனால் பள்ளிப்பருவத்தில் தாய்மொழிப்பற்று தமிழ் மாணவர்களிடையே அதிகரிக்கவும் நல்வாய்ப்பாக உள்ளது என்றும் உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் மற்றும் தன்முனைக் கவிதைகள் குழும நிர்வாகி கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் இந்த அறிவிப்பினை செயற்குழுவில் இதனை வரவேற்றுள்ளார். பல தமிழ் இலக்கிய அமைப்புகள் ஏற்கனவே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்களுக்கு விருதுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கி வருகின்றன. இருப்பினும் அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை மாணவர்களுக்கான நல்லதொரு அங்கீகாரம் என்றும் மன்ற நிர்வாகிகள் கூறினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?