தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு


தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது


கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெ.ஜே.லியோன் தலைமை வகித்தார்


பள்ளி தாளாளர் சொர்ண கணபதி, மூத்த மாவட்ட நிர்வாகி நவனீத கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.


அறிவியல் பாடகர் கரிசல் கருணாநிதியின் பாடலுடன் கூட்டம் தொடங்கியது


மாவட்ட துணைத் தலைவர் கணேசன் வரவேற்றுப் பேசினார்


கூட்டப்பொருள் குறித்து மாவட்டச் செயலர் காந்தி விளக்கிப் பேசினார்.


இரங்கல் தீர்மானம், குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் திறனறிதல் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை, மாநில அலுவலக கட்டிட நிதி, வட்டாரக் கிளை மாநாடு, மாவட்ட மாநாடு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பேரலையின் சாட்சியம் நூலை வெளியிட்ட மாவட்ட செயலர் காந்திக்கு பொன்னாடை அணிவித்து, செயற்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


முன்னாக, துளிர் திறனறிதல் தேர்வு போஸ்டரை பள்ளி தாளாளர் சொர்ண கணபதி வெளியிட, மூத்த நிர்வாகிகள் நவனீதகிருஷ்ணன், துரைப்பாண்டியன் பெற்றுக் கொண்டனர்


நிறைவாக, மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் ஜெரோம், சசிகுமார், சுரேந்தர் பாரதி, துஷ்யந்தி போன்றோர் செய்திருந்தனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%