
வந்தவாசி, அக் 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வள்ளலாரின் 202 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு நிகழ்வு மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மகாவீர் வரவேற்றார். பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.ஸ்ரீதர், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி சு.தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரும், தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநருமான எஸ்.அப்பாண்டைராஜ் பங்கேற்று, வள்ளலாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் வள்ளலாரின் கொள்கைகள் இன்றளவும் அனைத்து மக்களிடையே சமரசத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துகிறது என்று பேசினார். மேலும் இந்த நிகழ்வில் முதுகலை ஆசிரியர் கு.சதானந்தன், சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம.சுரேஷ்பாபு, கவிஞர் வந்தை குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஜோதிடர் ஆர்.சங்கரநாராயணன் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?