தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்டார். மேலும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கள்ளக்குறிச்சி நகரில் 4 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட மைய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


26 புதிய நூல்களை வெளியிடுதல்:


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நாட்டுடைமை நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், செவ்வியல் நூல்கள், அரிய நூல்கள் வெளியீடு ஆகிய திட்டங்களின் கீழ் நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.


அந்த வகையில், அரிய நூல்கள் பிரிவில் “தமிழ்நாட்டில் காந்தி” எனும் நூலும், நாட்டுடைமை நூல்கள் பிரிவில் “தமிழர் தலைவர்” (தந்தை பெரியார்), தமிழில் சிறுபத்திரிகைகள், பாரதி நினைவுகள், பாரதியார் சரித்திரம், என் குருநாதர் பாரதியார், நான் கண்ட பெரியவர்கள் ஆகிய நூல்களும், மூத்த வரலாற்று அறிஞர்களின் தமிழ்நாட்டு வரலாறு அரிய நூல்கள் பிரிவில்– பல்லவர் வரலாறு மற்றும் மொகஞ்சதரோ அல்லது சிந்துச் சமவெளி நாகரீகம் ஆகிய நூல்களும், நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பிரிவில் டி.கே.சீனிவாசன் படைப்புலகம் என்ற நூலும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் குறட்டை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்தடை– ஒரு கண்ணோட்டம், மருத்துவ ஆராய்ச்சி முறைகளும் ஆய்வறிக்கை எழுத எளிய வழிமுறையும், Robert Frost Poems in Tamil, Ramayyan Ammanai (A Tamil Historical ballad) ஆகிய நூல்களும், இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் ஆதியும் நடேசன் தாத்தாவும், இரட்டை முனை வாள், எழிலனின் ஆசை, சாதனை, பாட்டிக்கு என்ன பரிசு தர வேண்டும், பூத்த சிறகுகள், அவள் ஒரு தேவதை, கண்டுபிடி கண்டுபிடி, காதல், முகிலைத் தேடி ஆகிய நூல்களும், செவ்வியல் நூல்கள் பிரிவில் பரிபாடல் என்ற நூலும், என மொத்தம் 26 புதிய நூல்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டார்


பொது நூலக இயக்ககம்:


தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் மாநிலம் முழுவதும் கல்வி, எழுத்தறிவு மற்றும் அறிவுப் பரவலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான நூல்கள், பருவ இதழ்கள் மற்றும் மின் வளங்களைக் கொண்டு அனைத்து வயதினரும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அணுகக்கூடிய மையங்களாக விளங்குகின்றன. இந்த நூலகங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் கல்வி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கின்றன.


கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட மைய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்:


கள்ளக்குறிச்சி நகரில் மாவட்ட மைய நூலகம் நான்கு தளங்களுடன் 14,369 சதுரடியில் 4 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%