தமிழ்நாட்டில் பொழுதுபோக்குக்கு ஒரு புதிய சகாப்தம்: டிசம்பர் 2ந் தேதி ‘சென்னை வொண்டர்லா’ துவக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா சங்கிலியான வொண்டர்லா ஹாலிடேஸ், சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பில் (இதில் 37 ஏக்கர் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது) ரூ. 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு பூங்கா சென்னை, எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலைவையைக் கலந்து ஒரு துணிச்சலான புதிய அத்தியாத்தைக் குறிக்கிறது.
இந்த பூங்கா டிசம்பர் 2ந் தேதி திறக்கப்படுகிறது என்று செயல் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அருண் கே.சிட்டிலப்பிள்ளை, தீரன் சவுத்ரி (சிஓஓ), (விபி பொறியியல்) அஜிகிருஷ்ணன் ஏ ஜி மற்றும் வைஷாக் ரவீந்திரன் (பூங்கா தலைவர்) ஆகியோர் தெரிவித்தனர்.
இப்பூங்கா சென்னையில் 43 உலகத் தரம் வாய்ந்த சவாரிகள் உள்ளன. இதில் உயர் த்ரில், குடும்பம், குழந்தைகள் மற்றும் நீர் விளையாட்டுகள் என்ற பிரிவுகளில் உள்ளன. இவை தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.1,489 தொடங்கி ஆன்லைன் முன்பதிவுகளுக்கு 10% தள்ளுபடியும், ஒரிஜினல் கல்லூரி ஐடியை காண்பிக்கும் மாணவர்களுக்கு 20% தள்ளுபடியும் , குழுக்கள் மற்றும் பருவக்காலங்களுக்கு ஏற்ப பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளும் உள்ளன.
இவ்விழாவில் நிர்வாக இயக்குனரும், தலைவருமான கே.சிட்டிலப்பிள்ளி பேசுகையில், ‘வொண்டர்லா சென்னை என்பது ஒரு தசாப்த கால கனவின் உச்சக்கட்டமாகும். இது தமிழக அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்கத்தால் இந்தியாவின் மிகவும் மேம்பட்ட பொழுதுபோக்கு பூங்காவாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். அவர்களின் படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் அரவணைப்பை பிரதிபலிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். தமிழ்நாட்டின் கோயில் சார்ந்த வடிவமைப்பு முதல் அதன் உண்மையான உள்ளூர் ரசனை வரை பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் அதன் கதையைச் சொல்கிறது. இதன் துவக்கம் தென்னிந்தியா முழுவதும் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்புக்கான தமிழ்நாட்டின் முற்போக்கான பார்வைக்கு எங்களது ஆழ்ந்த பாராட்டுக்களையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் சாகச விரும்பிகளை வரவேற்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்றார்.
தலைமை இயக்க அதிகாரி தீரன் சவுத்ரி கூறுகையில், இதன் பாதுகாப்பு, புதுமை மற்றும் செயல்பாட்டு பாரம்பரியத்தை தொடர்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சவாரி செயல்பாடுகள் மற்றும் விருந்தினர் சேவைகள் முதல் சுகாதாரம், விருந்தினர் கூட்ட மேலாண்மை வரை பூங்காவின் ஒவ்வொரு அம்சமும் தடையற்ற அனுபவத்தை வழங்க துல்லியமாக திட்டமிட்டுள்ளோம்.
உலகத்தரம் வாய்ந்த சவாரிகள்
பல சுழற்சிகள் ஜீரோ–ஜி ரோல்கள், தரையற்ற உள்ளமைவு ஆகியவற்றைக் கொண்ட சுவிஸ் பொறியியலில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பு, பறப்பதன் உணர்வை வழங்குகிறது.
ஸ்பின் மில்
செங்குத்து சுழல்கள், பல அச்சு இயக்கம் மற்றும் 4.5G விசைகளை இணைக்கும் 50 மீட்டர் உயரத்தில் ஸ்பின்னிங் த்ரில் சவாரி.
தமிழ்நாட்டில் நுழைவதன் மூலம், வொண்டர்லா பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரத்தில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது. தென்னிந்தியா முழுவதும் வலுவான தேதிச தடம் பதிக்க வழி வகுக்கிறது.
நுழைவுச் சீட்டுகளை https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 044 35024222, 044 35024300 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு டிக்கெட்டுகளை வாங்கலாம்.