கியூ.எஸ். உலகத் தரவரிசைப் பட்டியல் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 352-வது இடம் பிடித்தது வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்
Nov 23 2025
16
கியூ.எஸ். உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் நிலைத்தன்மை பிரிவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் உலகளவில் 352வது இடமும், இந்திய அளவில் 7வது இடமும் பிடித்துள்ளது.
இதுகுறித்து வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கூறியதாவது:-
2026-ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை பிரிவுக்கான தரவரிசை பட்டியலை கியூ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் உலக பல்கலைக்கழக தரவரிசையின் ஒரு பகுதியான நிலைத்தன்மை வகைப்பாட்டில் அறிவு பரிமாற்றம், கல்வி தாக்கம், வேலைவாய்ப்புகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி என்ற 8 அளவுகோலில் ஒட்டு மொத்தமாக 74.9 மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகங்களின் தரவரிசையில், உலகளவில் 352வது இடமும், இந்திய அளவில் 7வது இடமும் பிடித்து வி.ஐ.டி. சிறப்பு சேர்த்துள்ளது.
மேலும் சமுதாய தாக்கம், சுற்றுச்சூழல் தாக்கம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் தாக்கத்தில் 78.1 மதிப்பெண்கள் பெற்று, உலகளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 194-வது இடம் பிடித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு வி.ஐ.டி. பல்கலைக்கழகம் கியூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் உலகளவில் 396-வது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 2026-ம் ஆண்டில் 44 இடங்களை தாண்டி 352-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
2026 பதிப்பில் 106 இடங்களை சேர்ந்த 2,000 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் 400 இடங்களுக்குள் இதுவரை இல்லாத உயர்ந்த இடங்களை வி.ஐ.டி. எட்டி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?