சிவகங்கை மாவட்ட நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வு
Nov 23 2025
15
சிவகங்கை மாவட்டம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்து றையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி இலந்தங்கு டிபட்டி கண்மாய் பகுதியில் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.பொற்கொடி தெரிவிக்கையில், இத்திட் டத்தினை செயல்படுத்திட சிவகங்கை மாவட்டத்திற்கு 120-ஹெக்டேர் பரப்பளவில் 1-ஹெக்டேருக்கு 2,000-எண்ணம் வீதம் மொத்தம் 2.40-இலட்சம் எண்ணம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய 2025-26 ஆம் ஆண்டிற்கு இலக்கு நிர்ணயம் செய் யப்பட்டு, அதன் துவக்க மாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட் டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இன்றையதினம் சிவகங்கை ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தகுடிபட்டி கண்மா யில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் இத்திட்டமா னது துவக்கி வைக்கப்பட் டுள்ளது என்று தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், மீன் வளம்- மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தி.சண்மு கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?