சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள கொங்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). இவர் கடந்தாண்டு ஜூலை 8 ஆம் தேதி அப்பகுதியில் விளை யாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர் சிறுமியை அழைத்துச் செல்வதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பவானி அனைத்து மகளிர் காவல் துறையினர் சுப்பிர மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொர்ண குமார் வியாழனன்று தீர்ப்பளித்தார். அதில் சுப்பிரமணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராத மும் விதித்து தீா்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வும் அவர் பரிந்துரைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?