குட்கா விற்பனை: ரூ.2.17 கோடி அபராதம்

குட்கா விற்பனை: ரூ.2.17 கோடி அபராதம்

 ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை சம்ப வம் தொடர்பாக, நடப்பாண்டில் இதுவரை ரூ.2.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள் ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி அருகாமையில் உள்ள கடைக ளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். இத்தடையினை மீறி விற்பனையில் ஈடு படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை புகையிலைப் பொருட் கள் விற்பனை செய்த 807 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு, ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக் கில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 452 கிலோ புகையிலைப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகை யிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார்களை 0424 - 2223545 மற்றும் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு புகார் அளிக்கும் நுகர்வோர்களின் விபரம் ரகசியமாக வைக் கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்த சாமி தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%