பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், அங்கு சாகுபடி செய்திருந்த 200 வாழை மரங் களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட கொத்தமங்கலம் மற்றும் புதுப்பீர்கடவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 5 யானைகள், கடந்த சில நாட்களாக புதுப்பீர்கடவு ஊராட்சிக் குட்பட்ட புதுக்காடு பகுதியில் உலா வருகின்றன. இந்நிலை யில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜனனிபிரியா (37) என்பவரது தோட்டத்திற்குள் புதனன்று புகுந்த 5 யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாழை மரங் களை சேதப்படுத்தின. அப்போது விவசாயத் தோட்டத்தில் தங்கியிருந்த தொழிலாளி மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் யானைகள் நடமாடுவதை கண்டு அச்சமடைந்த னர். தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு களை வெடித்து யானைகளை நீண்ட போராட்டத்துக்கு பின் வனப் பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?