இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

அரசு பேருந்து ஓட்டுநருக்கு உரிய இழப் பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அரசு பேருந்து பணிமனையில், ஓட்டுநராக பணியாற்றி வருபவர் துரைசாமி (57). இவர் கடந்த 2021 மே.5 ஆம் தேதி ஈரோடு - உடு மலைபேட்டை சாலையில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் பேருந்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த நபர் இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்து உயிரிழந்தார். இந்நிலையில், பேருந்தை இயக்கிய துரைசாமியை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த இடை நீக்கம் காலத்தில் பாதி ஊதியம் வழங் கியதோடு, பணிக்கொடைகளை வழங்கா மல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஜன.7 துரைசாமி கோவை தொழிலா ளர் நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். அதில், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், நிறுத்தி வைத்த ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதை யடுத்து மார்ச் மாதம் முதல் பணி வழங்க வும், நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் பணிக் கொடை என ரூ.32,157 வழங்கவும் உத்தர விடப்பட்டது. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் செயல்படுத்தாதால், மீண்டும் கடந்த 2023 மார்ச் மாதம் தொழிலாளர் நல நீதி மன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய் தார். அந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவ.10 ஆம் தேதி அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று கோவை மாந கரில் இயக்கப்படும் எண்.11 அரசு பேருந்து கோவை ரயில் நிலையத்திற்கு வந்த போது, அதனை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத் தில் நிறுத்தினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%