மண்பாண்டப் பொருட்களை சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மண்பாண்டப் பொருட்களை சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மண்பாண்டப் பொருட்களை சந் தைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் கார்த்திகை தீப திரு விழாவின்போது பொதுமக்கள் தங்க ளது வீடுகள், கோவில்களில் அகல் விளக் கில் தீபம் ஏற்றி வழிபாடுவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் பொதுமக் கள் புது அகல்விளக்குகளை வாங்கு வது வழக்கம். இவ்விழாவினை முன் னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தரும புரி குப்பாகவுண்டர் தெரு, அதியமான் கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்பாண்டத் தொ ழிலாளர்கள் கடந்த சில தினங்களாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அதியமான்கோட்டையைச் சேர்ந்த லோகநாயகி என்பவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக சீன களி மண் மற்றும் இயந்திர அச்சில் தயாரிக்கப் படும் அகல்விளக்குகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கைகளில் செய்யப்படும் மண் விளக்குகளுக்கு வரவேற்பு குறைந்த தால், இத்தொழிலில் ஈடுபட்டிருந்த பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும், பலர் பாரம்பரியப்படி கையால் செய்யப்படும் மண் விளக்கு களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்ற னர். ஒரு விளக்கை வியாபாரிகள் எங்க ளிடம் 60 பைசா வரை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இது அகல் விளக்கு செய்ய வாங்கப்படும் மண், சூளை வைக்க ஆகும் செலவு கணக்கு பார்க்கும் போது, குறைந்த அளவே எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மண்பாண்டப் பொருட்களை சந்தைப்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மழைக்கா லங்களில் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%