கிருஷ்ணகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி திறன் சோதனை தேர்வுக்கான இலவச பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழித் திறன் சோதனை (ஐஇஎல்டிஎஸ்) பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தாட்கோ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற முன்னணி நாடுகளில் உள்ள பல் கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் பயிலு வதற்குத் தேவையான ஐஇஎல்டிஎஸ் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 முதல் 35 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். குடும்ப வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒன்றரை மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சிக்கான செலவுகள் முழுமையாக தாட்கோவால் ஏற்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சியில் சேர விரும்புவோர் தாட்கோ இணையதளம் www.tahdco.com-ல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?