கிரானைட் கட்டிட கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்: கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவு
Nov 23 2025
19
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக, கிரா னைட் மற்றும் பாலிசிங் நிவனங்கள், கிரானைட் தொழிற் சாலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்ததாவது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் கிரானைட் தொழிற் சாலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதி கள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட நெறிமுறைகள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால் விவரிக்கப்பட்டது.
கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் நிறுவனங்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் முத்துராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) க்ரிதி காம்னா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கிரானைட் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?