நாமக்கல்லில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
Nov 23 2025
16
நாமக்கல் மாவட்டம் ஸ்ரீமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு, 4,777 பேருக்கு மொத்தம் ரூ.72.07 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழா மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் தலைமையிலும், மேயர் கலாநிதி முன்னிலையிலும் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில் வட்டியில்லா பயிர்கடன் ரூ.41.01 கோடி, வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் ரூ.7.10 கோடி, மத்திய காலக்கடன் ரூ.90 லட்சம், சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.18.83 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம், டாப்செட்கோ கடன் ரூ.10 லட்சம், சிறுவணிக கடன் மற்றும் இதர கடன்கள் ரூ.2.83 கோடி என மொத்தம் ரூ.72.07 கோடி வழங்கப்பட்டது.
மேலும் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 40 கூட்டுறவு நிறுவனங்கள், சிறந்த பணியாளர்கள், விற்பனையாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாராட்டுப் பெற்றதுடன், வினாடி வினா, கோலப்போட்டி, அடுப்பில்லா சமையல், ஸ்லோ சைக்கிள், ஸ்லோ பைக் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி வழங்கிய பள்ளிகளுக்கும் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணை மேயர் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மா.சந்தானம், மாவட்ட வருவாய் அலுவலர், மேலாண்மை இயக்குநர் (சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர்) இரா.குப்புசாமி, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இணைப்பதிவாளர், செயலாட்சியர் யசோதாதேவி, துணைப்பதிவாளர் சே.ஜேசுராஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?