தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை  இயல்பை விட அதிகமாக பெய்யும்

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வா ளர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பாக 44 செ.மீ. மழை பதிவாகும். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முறையே 33.7 செ.மீ., 45.4 செ.மீ., 47.7 செ.மீ., 71.4 செ.மீ., 44.5 செ.மீ., 45.8 செ.மீ., 58.9 செ.மீ. என மழை பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய் துள்ளது. நடப்பாண்டு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தனியார் வானிலை ஆய்வா ளர்கள் முன்கணிப்பு வெளியிட்டுள்ளனர். தாழ்வுப்பகுதி, மண்டலம், புயல் என அடுத்தடுத்த நிகழ்வு களால் மழை தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்றும், வடகிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து மழையை வழங்குவதற்கும், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் இயல்புக்கு அதிகமாக மழை பதிவா வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கணிக்கப் பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%