தயார் நிலையில் 6 ஆயிரம் நிவாரண முகாம்கள்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

தயார் நிலையில் 6 ஆயிரம் நிவாரண முகாம்கள்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்



சென்னை: பரு​வ​மழை​யால் பாதிப்பில் இருந்து பொது​மக்​களை பாது​காக்க 122 பல்​நோக்கு பேரிடர் பாது​காப்பு மையங்​களும், 6,033 தற்​காலிக நிவாரண முகாம்​களும் தயார் நிலை​யில் உள்​ள​தாக அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.


வங்​கக்​கடலில் உரு​வான காற்​றழுத்த தாழ்வு மண்​டலத்​தால், தமிழகத்​தின் டெல்டா மற்​றும் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர், திரு​வண்​ணாமலை ஆகிய மாவட்​டங்​களில் கனமழை முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும் என்​றும் இந்​திய வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதையடுத்​து, நேற்று சென்னை சேப்​பாக்​கம் எழிலக வளாகத்​தில் உள்ள அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் அமைச்சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் ஆய்வு மேற்​கொண்​டார்.


அப்​போது அவர் கூறிய​தாவது: நீர்த்​தேக்​கங்​களில் உபரிநீர் இருப்பினை முன்​கூட்​டியே திறத்​தல் மற்​றும் முறை​யான நீர் மேலாண்​மையின் மூலம் நகரம் மற்​றும் குடியிருப்பு பகு​தி​களில் வெள்​ளம் ஏற்​ப​டாமல் பாது​காக்​கு​மாறும் பாதிப்​புக்குள்​ளாகக் கூடிய தாழ்வான பகு​தி​களை தொடர்ந்து கண்காணிக்​கு​மாறும் தேவைக்கேற்ப பொது​ மக்​களை முன்கூட்​டியே நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கு​மாறும் மாவட்ட நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. மாநிலத்​தில் உள்ள 122 பல்​நோக்கு பேரிடர் பாது​காப்பு மையங்​களும், 6,033 தற்​காலிக நிவாரண முகாம்​களும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.


அலு​வலர்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களு​ட​னும் தயார் நிலை​யில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்​புப் படை​யின் ஒரு அணி நெல்லையிலும், ஒரு அணி விழுப்​புரம் மாவட்​டத்தி​லும், ஒரு அணி சென்னையிலும்​ முன்​கூட்​டியே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கூடு​தலாக 5 அணி​ அரக்​கோணத்​தில் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளனர்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.


ஆய்​வின்போது, வரு​வாய் நிர்​வாக ஆணையர் எம்​.​சாய்கு​மார், துறை செயலர் பெ.அ​மு​தா, பேரிடர் மேலாண்மை ஆணை​யர் சிஜி​தாமஸ்​ வைத்​யன்​ உடனிருந்​தனர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%