தருமபுரியில் வாக்காளர் படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு காண தொலைபேசி எண்கள் வெளயீடு

தருமபுரியில் வாக்காளர் படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு காண தொலைபேசி எண்கள் வெளயீடு


தருமபுரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக ஒவ்வெரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது.


வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும். கணக்கெடுப்பு படிவம் மீண்டும் அளிக்காத வாக்காளர் பெயர் வரைவு பட்டியலில் இடம் பெறாது.


எனவே வாக்காளர் பெருமக்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்து கையாப்பமிட்டு மீண்டும் பிஎல்ஓ வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பிஎல்ஓ வாக்குச்சாவடி நிலை அலுவலர் மொபைல் எண் ஒவ்வொரு படிவத்தின் மேற்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பிஎல்ஓவை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வட்டாட்சியர், கிராம நிருவாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.


மேலும், சந்தேகங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1950, வாட்ஸ-அப் - தேர்தல் உதவி எண் 9444123456, வாக்காளர் பதிவு அலுவலர் (தருமபுரி) 04342-260927, வாக்காளர் பதிவு அலுவலர் (பாலக்கோடு) -04348-222045, வாக்காளர் பதிவு அலுவலர் (பென்னாகரம்) 04342-255636, வாக்காளர் பதிவு அலுவலர் (பாப்பிரெட்டிப்பட்டி) 04346-246544, வாக்காளர் பதிவு அலுவலர் (அரூர்) 04346-296565 ஆகிய தொலைபேசி எண்களில் உதவி மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%