நீலகிரியில் மகளிர் திட்ட விழாவில் 13,173 பேருக்கு ரூ.9.85 கோடி நலத்திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார்

நீலகிரியில் மகளிர் திட்ட விழாவில் 13,173 பேருக்கு ரூ.9.85 கோடி நலத்திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார்



நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில், மொத்தம் 13,173 பேருக்கு ரூ.9.85 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல், அன்புக் கரங்கள் திட்டத்தில் 5 குழந்தைகள் பயனடையும் ஆணைகள் வழங்கப்பட்டது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 22 பேருக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.30.51 லட்சம் மதிப்பிலான நிதியுதவியும் வழங்கப்பட்டது.


“பெண்களை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” மற்றும் “நீல்கிரி பிரிமீயர் லீக் –ரைட் பிச்" போன்ற கலெக்டரால் உருவாக்கப்பட்ட திட்டங்களின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பள்ளிகளிலிருந்து 6 பள்ளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்பிலான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார்.


விழாவைத் தொடர்ந்து, ஏழுமுறம் பாடி பழங்குடியினர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு, தோட்டமுலா பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தடுப்புச்சுவர் பணிகள் ஆய்வு, மாக்கமுலா பகுதியில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் கொள்கலன் மையம் கட்டும் பணிகள் ஆய்வு போன்ற பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாபார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, கூடலூர், நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் சக்திவேல், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர் இந்திரா, நகர்மன்ற தலைவர்கள் பரிமளம் (கூடலூர்), நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஜெயராணி, உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%