தருமபுரி மாவட்டம் சோகத்தூர் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 871 பேருக்கு பணி நியமன ஆணைகள் கலெக்டர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் வழங்கினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி ஆகியவற்றின் இணைப்பில் நடத்தப்பட்டது.
விழாவில் கலெக்டர் ரெ.சதீஷ் பேசும்போது, கடந்த ஆண்டு 2024 அக்டோபர் 5 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்ற 7,075 வேலைநாடுநர்களில் 1,570 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என கூறினார்.
முகாமில், மாற்றுத்திறனாளிகள் உட்பட 2,838 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 137 முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இதில், 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 871 நபர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு பெற்று, தங்களின் அறிவும் திறனும் வளர்த்துக்கொண்டு, தனியார்துறை வேலைவாய்ப்புகளிலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, இந்தியன் வங்கி பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தருமபுரி நகர மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.தீபா, தொன் போஸ்கோ கல்லூரி செயலாளர் ராபர்ட் ரமேஷ் பாபு, உள்ளிட்ட துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?