தேவையான பொருட்கள் :புழுங்கல் அரிசி துவரை அல்லது துவரம் பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாய் கடுகு சிறிது எண்ணெய் கருவேப்பிலை பெருங்காயத்தூள் சிறிதளவு
செய்முறை :அரிசி ஒரு கப் ,துவரை அல்லது துவரம் பருப்பு அரை கப், கடலைப்பருப்புஅரைகப் ,உளுத்தம் பருப்புஅரை கப், எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் தனித்தனியாகஊற வைக்க வேண்டும் பிறகு நன்றாக கழுவி மிக்ஸியில் சிறிது கெட்டியான அளவிற்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் வாணலியில் தாளிப்பதற்கு சிறிது எண்ணெயை ஊற்றி கடுகு நான்கு மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் சிறிது பெருங்காயத் தூளை போட்டு அரைத்து வைத்த மாவில் கொட்டவும் தேவையான அளவு உப்பு சேர்த்துநன்கு கலக்கவும் பிறகு கனமாக இருக்கக்கூடிய வாணலி அல்லது வெண்கலப் பானை எடுத்து அதில் கொஞ்சம் என்னை ஊற்றி மாவை அதில் கரண்டியால் ஊற்றவும் பிறகு மேலே தட்டை போட்டு மூடி வைக்கவும் தீயை மிதமான சூட்டில் வைக்கும் சிறிது நேரம் கழித்து மூடியை எடுத்து அடையை திருப்பி போடவும் மொறு மொறு என்று தவலை அடை ரெடி அதற்கு தேங்காய் சட்டினி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
நன்றி
எம் எல் பிரபா
ஆதம்பாக்கம் சென்னை.

எம் எல் பிரபா
ஆதம்பாக்கம்
சென்னை 88
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?