தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக நடிகர் மோகன்லாலை கேரள அரசு கௌரவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று லால் சலாம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் - பண்பாட்டு நிகழ்வான இதில் மாநில முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், இந்தாண்டு தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன்லாலை மரியாதை செய்யும் விதமாக மாநில அரசு நினைவு விருதை வழங்கியது.
இதுகுறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “நடிகர் மோகன்லால் ஒவ்வொரு மலையாளிகளின் பெருமை. 1984 ஆம் ஆண்டு மட்டும் 34 திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இன்று நடிக்கும் நடிகர்கள் ஆண்டிற்கு 2 அல்லது 3 படங்களில் மட்டுமே நடிக்கின்றனர். மோகன்லால் தன் பன்முகத்திறமையால் போற்றப்படுபவர்.” என பாராட்டினார்.
நிகழ்வில் பேசிய மோகன்லால், “தில்லியில் விருது வாங்கியதைவிட சொந்த ஊரில் பாராட்டுகளைப் பெறுவது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இங்குதான் நான் பிறந்து, வளர்ந்தேன். இதன் காற்றும், நினைவும் எப்போதும் என் ஆன்மாவின் பகுதியாகவே இருக்கிறது. சில உணர்வுகளை நடிக்க முடியாது. நான் வெற்றிகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், எப்போதும் இரண்டையும் சமமாகவே எண்ணுகிறேன். இந்த சமூகமும் ரசிகர்களும் இல்லையென்றால் என்னால் எதையும் சாதித்திருக்க முடியாது” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?