வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இடங்கள் ஐசிஏஆர் தேர்வு மூலம் நிரப்பப்படும்: சிவராஜ் சிங் சௌகான்
Oct 06 2025
12

நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதத்தை அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு குழு என்ற கொள்கையின்படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தத் தேர்வை நடத்தும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 12 ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை படித்த மாணவர்கள் ‘க்யூட்-ஐசிஏஆர்’சிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சிவராஜ் சிங் சௌகான், வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதத்தை அகில இந்திய போட்டித் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை எளிமைப்படுத்தப்படுவதாக கூறினார்.
இது 2025-26 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும், இது பி.எஸ்சி. வேளாண்மையில் சேருவதில் உள்ள சேர்க்கை தொடர்பான சிக்கல்களையும் நீக்கும். இதன் மூலம் சுமார் மூவாயிரம் மாணவர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று சௌகான் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?