தாயுமானவர் திட்ட வயது வரம்பு குறைப்பு

தாயுமானவர் திட்ட வயது வரம்பு குறைப்பு



சென்னை: தாயுமானவர் திட்டப் பயனாளிகளுக்கான வயது வரம்பு 70-இல் இருந்து 65 ஆகக் குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றாக சிறப்புக் கவனம் தேவைப்படும் 70 வய துக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத் திற்கே சென்று விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயு மானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தோர்கள், மாற்றுத்திறனா ளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை யில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 70-இல் இருந்து 65 ஆகத் தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.


‘ரோடு ஷோ’வுக்கு நெறிமுறைகள்: முதலமைச்சர் ஆலோசனை


சென்னை: அரசியல் கட்சிகள் ‘ரோடு ஷோ’ நடத்துவ தற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வரு கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து என்ன மாதிரியான வழிகாட்டுதல்களை பின்பற்றலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நெறி முறைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

அமைச்சர் விளக்கம்


 சென்னை: நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் போக்குவரத்து, ஒப்பந்த விதிகளின்படி முறையாக செய்யப் பட்டுள்ளது. நெல் கொள்முதலும், நகர்வும் துரிதமாக நடை பெற்று வருகிறது. திமுக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக நெல் போக்குவரத்து கட்டணம் வெகுவாக குறைந் துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி விளக்கம் அளித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%