பொங்கல் வேட்டி, சேலை நவ.15 முதல் விநியோகம்

பொங்கல் வேட்டி, சேலை நவ.15 முதல் விநியோகம்



அமைச்சர் காந்தி தகவல் காஞ்சிபுரம், நவ.1- பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படும் இலவச வேட்டி, சேலை நவம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் எண்ணெய்க்கார தெரு வில் உள்ள முருகன் பட்டுப்புடவை கூட்டு றவு சங்கத்தின் விற்பனை நிலையம் புனரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் குத்து விளக்கு ஏற்றி விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காந்தி, ரிப்பன் வெட்டி முதல் வியாபாரத்தைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியா ளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, “திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மிகவும் தர மாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ் கின்றனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் நவம்பர் 15 ஆம் தேதி முதல் விநியோகிக்கப் பட வுள்ளன” என்று தெரிவித்தார். “இந்திய அளவில் காஞ்சிபுரம் பட்டுக்கு அதிக வரவேற்பு இருந்து வரு கிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங் களில் விற்பனை செய்யப்படும் பட்டு கள்தான் உண்மையான பட்டு. அதனை உத்திரவாதத்துடன் விற்பனை செய் கிறோம்” என்றார். “தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால் பட்டுச் சேலைகளின் விலை யும் உயர்ந்துள்ளது. எனவே, புடவை களில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழைக் காரணமாக இதுவரை நெச வாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என்று அமைச்சர் காந்தி குறிப் பிட்டார். “அதிமுக ஆட்சியில் பத்தாண்டு களில் 9 ஆண்டுகள் கோ-ஆப் டெக்ஸ் நிறு வனம் நட்டத்தில் இயங்கியது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டி லேயே ரூ. 9 கோடி லாபம் ஈட்டியது. 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப் பட்டு உள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டு றவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%