ஆராரோ.. ஆரிரரோ..
ஆரமுதே கண்ணுறங்காய்..
அன்னை இங்குப் பாடுவதை கேட்டப்படி கண்ணுறங்காய்.!
வந்தாய் அழுதபடி.. வருங்காலம் உணர்ந்தபடி..
வந்திடுமா வசந்தமென வாய் திறந்து கேட்டப்படி!
எந்தாய் இருந்தமடி.. எழிலுலகத் தாயின்மடி..
என்றுணர்ந்து கொண்டபடி.. நடப்பதுவே அரிச்சுவடி.!
பச்சை மண்ணுக்கு.. பால் மரங்கள் மேலாடை.. பசும் மலையில் இருந்து வரும் நதியெல்லாம் நூலாடை.!
கொச்சை மொழிபேசி.. கூடிவாழும் பறவையினம்.. கோலவான் மேடையிலே குதித்துவரும் தேனோடை!
இந்தநிலம் இருந்தபடி இருப்பதற்குப் பாடுபடு..
அந்த காசா நகரமெங்கும் அமைதிவர பாடலிடு..
உந்து சக்தியென அமைதிவரப் படையலிடு.. உலகமே விடியல் வரும் என்னுயிரே கண்ணுறங்கு.
நான் பெத்த ரெத்தினமே .
நலம் கொண்ட சித்திரமே.. வான் மழை தந்த முத்தே.. வளர்பிறையே கண்ணுறங்கு..
நாளை அமைதி வரும்.. நமக்கும் ஒரு காலம் வரும்.. வேளை பிறந்து வரும்.. விடியும் வரைக் கண்ணுறங்கு.
-வே.கல்யாண்குமார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?