புதுக்கவிதைகள்

புதுக்கவிதைகள்


1. சிரிப்பு என்னும் சாவி 


தொலைந்து விட்டால்


மகிழ்ச்சி எனும் வீடு 


பூட்டியே கிடக்கும்



2. பிறப்பு முதல் இறப்பு வரை 


உள்ள எல்லா தொல்லைகளையும் 


மனிதர்களுக்கு மனிதர்களே 


விதித்து கொண்டவை 


இதில் கடவுளுக்கு எந்த 


சம்பந்தமும் இல்லை



3. இறக்கும்போது நமது 


பாவ புண்ணியங்கள் 


குளோசிங் பேலன்ஸ் எதுவோ 


அதுதான் நமது அடுத்த தலைமுறை 


ஓப்பனிங் பேலன்ஸ்



4. திங்குற நெல்லுக்கு குடோனை 


கட்டாமல் அரசியல்வாதி 


சமாதிக்கு மணிமண்டபம்


செத்தவர்களுக்கு சிலைகளும் 


வைத்து என்ன பயன்



5. கடவுளுக்கு பணம் தேவை இல்லை 


என்று தெரிந்தும் உண்டியல் 


வைப்பது ஆத்திகம்


அந்த உண்டியலை கடவுளால் கூட 


காப்பாற்ற முடியாது என்ற நிலையில் 


அதற்கு பூட்டு போடுவது நாத்திகம்



6. துன்பத்தை சந்தியுங்கள்


பொறுமைக்கு வழி தெரியும்


அவமானத்தை சந்தியுங்கள்


உறுதிக்கு வழி தெரியும்


பசியை சந்தியுங்கள் 


உணவின் அருமை தெரியும்


உறவினர்களிடம் பணம் 


கேட்டுப்பாருங்கள்


பணத்தின் அருமை தெரியும்


தோல்வியை சந்தியுங்கள் 


வெற்றிக்கு வழி தெரியும்


கஷ்டங்களை சந்தியுங்கள் 


வாழ்க்கை புரியும்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%