
பார்க்காத ஒன்றை
பார்க்கக் துடித்த ஒன்றை
பார்க்கையிலே வரும் பரவசம்
மீண்டும் பார்க்கையிலே கிடைத்திடுமா ?
கேட்காத ஒன்றை
கேட்க துடித்த ஒன்றை
கேட்கையிலே வரும் பரவசம்
மீண்டும் கேட்கையிலே வந்திடுமா ?
உண்ணாத உணவொன்றை
அறியாத அச்சுவையை
உண்கையிலே உண்டாகும் ஆனந்தம்
அப்படியே நின்றிடுமா நாவிலே?
மாறாத சுகம் என்று நினைத்ததெல்லாம்
தினம் தினம் மாறி போகிறதே
மாறாத ஒன்றைத் தேடி
மனம் தன்னில் துடிக்கிறதே
அறியாத ஒன்றை அறிந்திட நினைத்து
புரியாத ஒன்றை புரிந்து கொண்டு
இறைவன் இவனென நினைத்த நாளில்
எல்லாம் நிலைத்திடும் அவனருளாலே
ஓம் குமார் P N,
2/38, கொட்டுக்கண்ணாரத்தெரு,
தெற்கு வாசல், மதுரை 625001
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%