
பேசும் திறமை மனிதனுக்கு அழகு,
பாசம் கலந்து வரும் வார்த்தை மிகவும் நல்லதே....
மென்மையான வார்த்தை இதயத்தை தொடும்
கடுஞ்சொல் வாழ்க்கையை இழக்க வைக்கும்.
நல்ல சொல் சுகம் தரும்,
கடுஞ் சொல் சோகம் தரும்,
எதையும் அளவோடு பேசினால் வாழ்வு சிறக்கும்.
நல்ல சொல் நட்பின் வழிக்கு பாலம் அமைக்கும்.
கடுஞ்சொல் உறவுக்கும் நட்புக்கும் இடையே பெரிய சுவரை எழுப்பி விடும் அல்லவா?
பேசும் திறனை நன்றாக வளர்த்துக் கொண்டால்,
பாசமும் அமைதியும் உலகம் முழுதும் நிலவி உன்னையே விரும்பும் ..
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%