அறுசீர் மண்டிலம்.
தமக்கு மிஞ்சிய
பொருளினைத்
தானமாய்க் கொடுத்தல்
நலமதே!
எமக்கே இன்றியே
வைத்திடின்
யாதும் பயனிலை
அறிந்திடு!
சுமையாய்ப் பணத்தினைச்
சேர்த்திடின்
துன்பமே வந்திடும்
அறிந்திடு!
அமைந்த பொருளினைப்
பிறருக்கு
அளித்தல் துன்பிலைத்
தெரிந்திடு!
அறமே உலகினில்
உயர்ந்ததே
அறிவாய் ஆகவே
புரிந்திடு!
திறமாய்ப் பொருளினைக்
கொடுத்திடு
தேர்ந்து நீயுமே
தொடுத்திடு!
சிறப்பாய்ப் பிறருக்கு
அளித்திடு
சீர்மை யோடுதான்
களித்திடு!
உறவாய் அனைவரில்
நின்றிடு
ஊருக் குதவியே
சென்றிடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%