
தடைகள் வந்தாலும் தளரவில்லை மனம்,
திகைப்பில்லா வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சியே ..
முயற்சி இருந்தால் மலரும் வெற்றி,
மனதில் நம்பிக்கை என்றும் மண்வாசனை வீசுவது உறுதி
சோர்வின்றி முயன்றால் சிகரம் அருகில்,
சிந்தனை நேர்மறையாக இருந்தால் ஒவ்வொரு நொடியும் வெற்றிதான்.
அயராத உழைப்பு வழி காட்டும் நட்சத்திரம்,
அஞ்சாத இதயம் எழுதும் வெற்றி வரலாறு.
திகைப்பில்லா வெற்றி தான் நிஜ ஜெயம்,
தன்னம்பிக்கையிலே மலர்கிறது வெற்றியின் சிரிப்பு
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%