ஒளி விளக்கு

ஒளி விளக்கு


எங்கெங்கும்

 வித்தைக்காரர்கள் மறைந்து இருக்கிறார்கள்.

நாம் பேசுவது, நாம் நடப்பது, நாம் முடிவெடுப்பது —

அவர்கள் விரல் நுனியில் வைத்து ஆட்டுவிக்க முயல்கிறார்கள்.


நாம் அவர்கள் நினைப்பதுபோல் நடந்துகொள்கிறோம் என்று தோன்றினாலும்,

அது உண்மை அல்ல —

அவர்கள் ஆட்டத்துக்குள் நம்மை நாமே இழந்துவிடவில்லை.

நம்முள் இருக்கும் நம்பிக்கை எனும் ஒளி விளக்கு எப்போதும் விழித்திருக்கிறது.


“இது எங்களால் முடிவுசெய்யப்பட்டது”,

“இது எங்களால் வழிநடத்தப்பட்டது” 

சிலரால் கைகாட்டப்படும் பாதை

அந்த பாதையை நாமே சீரமைத்து செல்கிறோம்.

நம் வாழ்க்கை பாதையை,

நம்முள் இருக்கும் ஒளி தான் சீரமைத்துக்கொண்டு செல்கிறது.


நம் வாழ்வில்

சிலர் காட்டும் கவனமும், நம்பிக்கையும் — நம்மை சரியான பாதையில் இட்டுச் செல்கிறது.

தவறிய இடங்களில் திருத்திக்கொள்ள,

குறைபட்ட இடங்களில் நிறைவு அடைய,

துன்பத்தில் இருந்து மீண்டு வர —

அந்த கவனிப்பும் உற்றுநோக்கலும் துணையாக இருக்கிறது.


எந்த மனநிலையிலும்,

எந்த சூழலிலும் —

நம் வளர்ச்சியை ஊக்குவிப்பவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நம்மை நல்வழிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

----

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%