ஆரோக்கியம்

ஆரோக்கியம்


-----------------------------

சித்திரத்திற்கு

எழில் ஊட்டும்

தேக சுவற்றை

விரிசல் விழாமல்

திடமாக்கிட

பரிசுத்தம் பேணுவோம்!


புகையில்லா

பசுமை வெளியில்

காலை வேளையில்

பவனி வருகையில்

அமிழ்த காற்றை

நுரையீரல் நுகர்ந்து

ஆயுள் வளரட்டும்!


இரவின் ரம்மியம்

தாலாட்டுப்பாட

தலைசாய்த்து

நித்திரையில் ஆழ்ந்து

கண் விழிக்கையில்

சோர்வுகள் தெறித்தோடி புத்துணர்வு குடிகொள்ளும்!


அறுசுவை உணவுகள்

சரிவிகிதமாய்

அமையாமல்

துரித உணவகங்களில்

நாவின் சுவைகள்

மலர்வதனால் நலம்

வாடுகின்றது!


அசுத்தங்களால்

உடலை ஆக்கிரமித்து

உறுப்புகளில் ஊடுருவும் கிருமிகள்

மரணத்திற்கு ஒத்திகைப்பார்க்கின்றன!


இயந்திர உடற்பயிற்சி

கூடங்கள்

வாழைத்தண்டு

தேகங்களையும்

இரும்பாய் வார்த்தெடுக்கும்

உறுதியாய்ப்புறப்படுங்கள் தோழர்களே!



கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%