திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கணேசன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கணேசன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

திட்டக்குடி.செப்.25


கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களூர் ஒன்றியத்தில் உள்ள வினாயகநந்தல், கச்சிமைலூர், பொயணப்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் குறைக்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் சென்று கேட்டறிந்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித்தொகைகள் கேட்டும், வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன. மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு புடவைகளை அமைச்சர் கணேசன் வழங்கினார். இதில் வேப்பூர் வட்டாட்சியர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அமிர்தலிங்கம் செங்குட்டுவன் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%