திமுகவுக்கு விஜய் ஒரு பொருட்டல்ல

திமுகவுக்கு விஜய் ஒரு பொருட்டல்ல



புதுக்கோட்டை,செப்.25-

தவெக தலைவர் விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என  அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதிஅளித்தபேட்டி- 

 நான் வேறு கட்சியில் இருந்து வந்திருந்தாலும், எனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி, இந்தியா முழுவதும் அடையாளம் காட்டியது திமுக தான். எனது கால் நூற்றாண்டு அரசியல் வரலாறு திமுகவில் தான் உள்ளது.  தவெக தலைவர் விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

 ஆட்சியில் பங்கு கேட்போம் என்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் கருத்து குறித்து திமுக தலைமையும், காங்கிரஸ் தலைமையும் பேசி முடிவெடுக்கும். திமுக எப்போதும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லுமே, விழுங்கிவிடாது. திமுக கூட்டணி உடையும் என முன்னாள் முதல்வர் பழனிசாமி பகல் கனவு காண்கிறார். மத்திய அரசு தற்போது குறைத்துள்ள ஜிஎஸ்டி வரியை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%