திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு



அக்டோபர் 4-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

சென்னை,


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வண்டி எண்.22497), வரும் அக்டோபர் 6-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ கங்காநகர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22498), வரும் அக்டோபர் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20481), வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து புறப்பட்டு ஜோத்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20482), வரும் அக்டோபர் 4-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%