திருச்சி ரசிக ரஞ்சன சபா, சம்ஸ்கார் பாரதி திருச்சி இணைந்து நாடகத் தந்தை "தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள்
Sep 23 2025
28

திருச்சி ரசிக ரஞ்சன சபா, சம்ஸ்கார் பாரதி திருச்சி இணைந்து நாடகத் தந்தை "தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள் " விழாவை "சபா" வின் F.G.N அரங்கில் 21.09.25 அன்று கொண்டாடியது.
இதன் ஒரு பகுதியாக ,
சாந்தி ஸ்ரீ குழுவினரின் " ஸ்ரீ வள்ளி திருமணம்" நாடகம் நடைபெற்றது.
சம்ஸ்கார் பாரதி மாநிலப் பொதுச் செயலாளர் திரு I. இருளப்பன் முன்னிலை வகிக்க, கலைமாமணி ரேவதி முத்துஸ்வாமி வாழ்த்துரை வழங்கினார்.
திருச்சி சம்ஸ்கார் பாரதி சார்பில், திரு.ஆதி.ஸ்ரீதர்
சாந்தி ஸ்ரீ இருவருக்கும் " நாடகச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக ஸ்ரீமதி. ஸ்ரீநிதி இறைவணக்கப் பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் , தவத்திரு .சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து திருமதி. S.N. ராஜராஜேஸ்வரி உரையாற்றினார்.
ஸ்ரீமதி ஸ்ரீதேவி ராஜூ வரவேற்புரை நல்க, செல்வி. பார்கவி, திருமதி. ஜனனி அபிஷேக் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திருமதி. கோமதி வெங்கட் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
சம்ஸ்கார் பாரதி நோக்கப் பாடலுக்கு ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா மாணவிகள் நடனம் ஆடினர்.
திருமதி. ஜெயா ஸ்ரீதர் நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.
ஸ்ரீகாந்த் திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?