வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடக்கம்.

வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடக்கம்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா தொடங்கியது. கடந்த 21- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, பூர்வாங்க பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 22- ந்தேதி திங்கட்கிழமை காலை 7.30 ‌மணிக்கு கோபூஜை, விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மண்டகப்படி உபயதாரர் சென்னை மீனா ராம் டிரஸ்ட் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மாலை 6.30 மணிக்கு யாகசாலை ஹோமங்கள், பூர்ணஹுதி காலம் 1, சுவாமி விசாலாட்சி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மண்டகப்படி உபயதாரர் ஸ்ரீவைத்தீஸ்வரர் நற்பணி மன்ற துணைத் தலைவர் வலங்கைமான் கீழத்தெரு சா. குணசேகரன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அறங்காவலர் ஆர்.சிவராமகிருஷ்ணன், ஸ்ரீ வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற செயலாளர் ஆர்.ஜி.பாலா மற்றும் எஸ்.மூர்த்தி, வி. மோகன், கோவிந்தராஜன், பரந்தாமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நவராத்திரி மஹோற்சவ விழா வருகிற அக்டோபர் 01- ந்தேதி வரை காலை, மாலை இருவேளையும் நடைபெறுகிறது.


விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, அறங்காவலர் சென்னை மீனா ராம் டிரஸ்ட் ஆர்.சிவராமகிருஷ்ணன், பூஜைகளை ஆச்சார்யம் திருபுவனம் சிவஸ்ரீ பாலசுந்தர சிவாச்சாரியார், சர்வசாதகம் திப்பிராஜபுரம் சிவஸ்ரீ சுரேஷ் சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் விருப்பாட்சிபுரம் சிவஸ்ரீ ஏ.குமார் சிவாச்சாரியார் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%