திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி: திருச்சி எம்பி துரை வைகோ நேரில் ஆய்வு
திருச்சி, அக்.01–
திருச்சி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியை, திருச்சி எம்பி துரை வைகோ நேரில் ஆய்வு செய்தார்.
இதன் மூலம் மக்கள் எளிதில் பயணம் செய்யலாம். திருச்சி விமான நிலையம் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் இருக்கிறது. இது திருச்சிராப்பள்ளி நகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் இதை நடத்துகிறது. இது தமிழ்நாட்டின் முக்கியமான பயண மையங்களில் ஒன்று. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு இது ஒரு முக்கிய போக்குவரத்து மையம்.
உள்நாட்டு விமான நிலையம்
இந்த விமான நிலையம் 2009–ம் நடுவில் தொடங்கியது. அப்போது இது ஒரு உள்நாட்டு விமான நிலையமாக இருந்தது. 2012–ஆம் ஆண்டு இது பன்னாட்டு விமான நிலையமாக மாறியது. இதன் பிறகு, பல வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்ல ஆரம்பித்தன. சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், ஷார்ஜா போன்ற இடங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியது. அதனால், விமான நிலையத்தில் புதிய கட்டிடங்களும் வசதிகளும் சேர்க்கப்பட்டன.
2017–ஆம் ஆண்டு ஒரு புதிய பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டது. இந்த முனையம் நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தந்தது. இந்த வளர்ச்சி திருச்சியை ஒரு பெரிய விமான மையமாக மாற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல்வேறு வசதிகளுடன் புதிய விமான முனையம் திறக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.
புதிய வசதி அறிமுகம்
இவ்வாறு இருக்கும் நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட FTI–TTP தளத்தின் செயல்பாடுகளை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆய்வு செய்தார். அடிக்கடி பயணம் செய்வோர் இ-கேட் வசதியைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் குடிவரவு சோதனை விரைவாக முடியும். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இதைஊக்குவிக்க விமான நிலைய நிர்வாகத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் FTI–TTP பதிவு செய்யும் முறை பற்றி அவர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். "Bureau of Immigration மற்றும் AAI ஆகியவை FTI–TTP-க்கு பதிவு செய்வதற்கான சோதனை செயல்முறையை விமான நிலையத்தில் உள்ள டிஜிட்டல் திரைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. e–gates-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பயணிகளுக்குக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும், என்று துரை வைகோ கூறினார். இது பயணிகளுக்கு FTI–TTP மற்றும் இ–கேட் பற்றி புரிய வைக்கும்.