திருச்செந்தூர் அருகே படகில் சென்று வாழைத்தார் அறுவடை செய்த விவசாயிகள்!
Nov 30 2025
12
தூத்துக்குடி: வயல்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் படகில் சென்று வாழைத்தார்களை அறுவடை செய்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதிக்கு அதிக அளவு தண்ணீர் வந்ததால், அருகே உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
சுமார் 50 ஆயிரம் வாழைகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. இவை அறுவடைக்கு் தயாராக இருந்தவை. மழைநீர் தேங்கி வாழைத்தார்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டதால், அவற்றை உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, மீனவர்களிடம் படகை வாடகைக்கு வாங்கி வந்து சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு சூழ்ந்திருந்த வெள்ளத்தைக் கடந்து வாழைத்தோட்டங்களுக்குச் சென்று வாழைத்தார்களை அறுவடை செய்து, படகில் வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு வாழைத்தார்களை அனுப்பி வைக்கப்பட்டன. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், இதற்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?