
திருப்பூர் குமரனின் 121 வது பிறந்தநாள் விழா மற்றும் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏசி சண்முகத்தின் 75 வது பிறந்தநாள் விழா :கோலாகல கொண்டாட்டம்!
வேலூர், அக். 6-
விடுதலைக்காக தன் உயிரையே விலையாகக் கொடுத்த தியாகி திருப்பூர் குமரனின் 121 வது பிறந்தநாள் மற்றும் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகத்தின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் சார்பில் அப்பு சுப்பையர் வீதியில் உள்ள வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் அபிஷேகமும், அன்னதானமும் நடைபெற்றது. மேலும் தியாகி திருப்பூர் குமரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஒருங்கே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 'கைத்தறி காவலன்' புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டலச் செயலாளர் பி. சரவணன், ஆர். வி. மூர்த்தி, பட்டு வி. பாபு முன்னிலை வகித்தனர். மேலும் புதிய நீதி கட்சியின் நகர நிர்வாகிகள் சசிகுமார், வெங்கடேசன், உமா மகேஸ்வரி, பெயிண்ட் செந்தில், முரளி, கன்னியப்பன், சுந்தரமூர்த்தி, சுந்தர்ராஜ், செல்வம், மோகன்குமார், சரத்குமார், ஆறுமுகம் மற்றும் ஹேமந்த் குமார், கட்சியின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?